Sunday, February 12, 2017

ஓபிஎஸ்., பக்கம் சாய்ந்த அதிமுக.,வின் நட்சத்திர பேச்சாளர்கள்!


ஓபிஎஸ்., பக்கம் சாய்ந்த அதிமுக.,வின் நட்சத்திர பேச்சாளர்கள்!



12 பிப்,2017 - 17:54 IST






எழுத்தின் அளவு:








முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு எம்.பி.,க்கள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் வந்து ஆதரவு அளித்து வரும் நிலையில் அதிமுக.,வின் நட்சத்திர பேச்சாளர்கள் பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

கமல், ஆர்யா, குஷ்பு, கங்கை அமரன், விசு, சித்தார்த், கவுதமி உள்ளிட்ட பல திரைநட்சத்திரங்கள் சசிகலா முதல்வராக வரக்கூடாது, பன்னீர் செல்வமே தொடரலாம் என்று கூறியிருந்தனர். இந்நிலையில் அதிமுக.,வின் நட்சத்திர பேச்சாளர்களாக திகழ்ந்து வரும் நடிகர்கள் ராமராஜன், தியாகு, அருண்பாண்டியன் ஆகியோர் நேரில் சென்று பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

பன்னீருக்கு ஆதரவு அளித்து ராமராஜன் பேசியதாவது: ஒரு முறை அல்ல. இரண்டாவது முறை, 3வது முறையல்ல. 4வதுமுறையும் பன்னீர் முதல்ராவார். மக்களுக்கு தெரியாமல் அரசியலில் எதுவும் நடக்காது என்ற நிலை உள்ளது. ஜெ.,வினால் அடையாளம் காணப்பட்டவர் ஓ.பி.எஸ்., ஜெ.,வுக்கு பெருமை சேர்க்க கூடியவர் ஓ.பி.எஸ்.,மக்கள் விரும்பியதால் ஓ.பி.எஸ். அணியில் இணைந்துள்ளேன். காமராஜரின் எளிமை, அண்ணாவின் அறிவு, ஜெயலலிதாவின் துணிவு அனைத்தும் அடங்கியவர்.

அம்மா என்ற 3 எழுத்து மந்திரம் போல் ஓபிஎஸ் என்ற 3 எழுத்துக்கு மந்திரமுண்டு.ஓயாமல் பொறுப்பாக செயல்படுவார் ஓ.பி.எஸ்., மக்களால் அடையாளம் காணப்பட்டவர்எது நடக்க கூடாது என நினைத்தோமோ அது நடந்து விட்டது. அனைத்து தலைவர்களின் வழியில் ஓ.பி.எஸ்., உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

நடிகர் தியாகு பேசியதாவது: ஓ.பி.எஸ்., எளிமையானமனிதர். தங்கமான மனிதர். அனைவரையும் அரவணைத்து பேசுவார். உழைப்பால் உயர்ந்தவர். பன்னீர், கிருஷ்ணா தண்ணீர், ஜல்லிக்கட்டை கொண்டு வந்தார். மக்கள் நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடியவர். நிரந்தரமாக தமிழகமுதல்வராக மக்களை ஆள வேண்டும்.தொண்டர்களும், மக்களும் உங்கள் பின்னால் உள்ளார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அருண் பாண்டியன் பேசியதாவது: நான் முதல்நாளே பன்னீரை பார்த்துவிட்டேன். தமிழர்களின் மானத்தையும், கவுரவத்தையும் காப்பாற்றி விட்டீர்கள் என அப்போதே கூறினேன். அங்கு கூட்டமில்லை. இங்கு சாதாரணமான கூட்டம் அல்ல. பிரியாணிக்காக வந்த கூட்டமல்ல. நாங்களும், அனைத்து இளைஞர்களும் ஓ.பி.எஸ்., பின்னால் உள்ளோம் . உங்களது ஆதரவு அனைவருக்கும் தேவை என்றார்.

இதேப்போன்று பிற நட்சத்திர பேச்சாளர்களான செந்தில், மனோபாலா, வையாபுரி, விந்தியா உள்ளிட்ட பலரும் தங்களது ஆதரவை பன்னீர் செல்வத்திற்கு தெரிவிக்க உள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.


0 comments:

Post a Comment