
இதை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல அபார சாதனைகளை நிகழ்த்தி இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த கிரிக்கெட் உலகின் ஜாம்பவான், சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கையும் சினிமா படமாக தயாராகியுள்ளது. இந்த படத்துக்கு ‘சச்சின்: ஏ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற பெயரில் திரைக்கு வர உள்ளது. இதில் சச்சின் தெண்டுல்கரே அவரது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஜேம்ஸ் எர்ச்கின் டைரக்டு செய்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை வரும் மே 26-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.
0 comments:
Post a Comment