Saturday, February 18, 2017

நடிகை பாவனாவை காரில் கடத்தி பாலியல் தொல்லை


நடிகை பாவனாவை காரில் கடத்தி பாலியல் தொல்லை



18 பிப்,2017 - 10:02 IST






எழுத்தின் அளவு:








சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பாவனா. தொடர்ந்து வெயில், ஜெயம் கொண்டான், தீபாவளி, அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது மலையாளத்திலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர், தெலுங்கு, கன்னடம் படங்களிலும் நடித்து தென்னிந்தியா முழுக்க பிரபல நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

பாவனா படப்பிடிப்பு ஒன்று திருச்சூரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்று விட்டு கொச்சிக்கு காரில் நேற்று இரவு 10.30 மணியளவில் திரும்பி கொண்டிருந்தார். கார், அங்கமாலி அருகே சென்றபோது, இன்னொரு காரில் வந்த மர்ம கும்பல், திடீரென பாவனாவின் காரை வழி மறித்து, அவரது காரில் ஏறிக்கொண்டனர். அதோடு காரை நிற்காமல் ஓட்டும்படி டிரைவரை மிரட்டியுள்ளனர். பின்னர் அந்தக்கும்பல் பாவனாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதோடு, அதை செல்போனில் படமும் பிடித்துள்ளனர்.

கார், பாலாரிவட்டம் அருகே வந்தபோது, அந்தக்கும்பல் காரை நிறுத்தி தப்பி ஓடிவிட்டனர். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போன பாவனா, அருகில் இருந்து ஒரு இயக்குநரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கதறி அழுதார். இதையடுத்து அங்கிருந்தபடியே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பாவனா கொடுத்த தகவலின் அடிப்படையில் அவரது முன்னாள் கார் டிரைவர் மார்டின் என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாவனாவுக்கு நேர்ந்த இந்த கொடுமை மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


0 comments:

Post a Comment