Friday, February 10, 2017

சித்திரை விஷு கொண்டாட்டமாக மோகன்லால் படம்..!


சித்திரை விஷு கொண்டாட்டமாக மோகன்லால் படம்..!



10 பிப்,2017 - 17:19 IST






எழுத்தின் அளவு:








கடந்த வருடத்தின் ஆரம்பத்தில், தான் நடித்த படம் எதையும் ரிலீஸ் செய்யாமல் சுமார் எட்டு மாதங்கள் தனது ரசிகர்களை பட்டினி போட்டார் மோகன்லால். ஆனால் அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக அடுத்தடுத்து வந்த மாதங்களில் அவர்களுக்கு 'ஒப்பம்', 'ஜனதா கேரேஜ்' 'புலி முருகன்' என வெற்றிப்படங்களை கொடுத்து திகட்ட திகட்ட விருந்து வைத்தார். இதோ இப்போது அவருடைய லேட்டஸ்ட் படமான 'முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

முன்பெல்லாம் வருடத்திற்கு ஐந்து அல்லது ஆறு படங்களில் நடித்த மோகன்லால், ரிலீஸ் தேதியை பற்றி பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை. ஆனால் இந்த ஆறு மாதங்களை கவனித்து பார்த்தால் தன்னுடைய படங்களை பண்டிகை தினங்களில் வெளிடுவதில் மோகன்லால் மிகுந்த கவனம் செலுத்தி வருவது நன்றாகவே தெரியும். அந்தவகையில் கடந்த வருடம் விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான் பண்டிகை ஆகியவற்றை முன்னிட்டு தனது படங்களை வெளியிட்டார். கடந்த கிறிஸ்துமஸ் ரிலீசாக வெளியாக திட்டமிருந்த படம் மட்டும் கேரளா தியேட்டர்கள் ஸ்ட்ரைக்கால் தள்ளிப்போய் கடந்த ஜனவரி-20ஆம் தேதி ரிலீஸானது..

அடுத்ததாக கேரளாவில் வரவிருக்கும் பண்டிகை என்றால் சித்திரை விஷு கொண்டாட்டம் தான். கடந்த வருடம் சித்திரையில் தனது படம் எதையும் ரசிகர்களுக்கு தராத மோகன்லால், இந்தமுறை மேஜர் ரவி இயக்கத்தில் தான் நடித்துள்ள '1971 ; பியாண்ட் தி பார்டர்ஸ்' படத்தை ரிலீஸ் செய்ய தீர்மானித்துள்ளாராம். மோகன்லாலின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதால், போஸ்ட் புரடக்சன் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் இயக்குனர் மேஜர் ரவி.


0 comments:

Post a Comment