வாத்தியார் வீட்டு பிள்ளையாக மாறிய பஹத் பாசில்.!
10 பிப்,2017 - 17:12 IST
மகேஷிண்டே பிரதிகாரம் படம் தந்த வெற்றியின் மகிழ்ச்சியிலும் அதேசமயம் விழிப்புணர்வுடனும் அடுத்தடுத்த படங்களின் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் பஹத் பாசில். அதனால் தானோ என்னவோ கடந்த ஒரு வருடமாக அவரது அடுத்த படம் எதுவும் வெளியாகவில்லை. தற்போது மலையாள சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர் ரபி மெக்கார்டின் இயக்கும் 'ரோல் மாடல்' என்கிற பத்தில் நடித்து வருகிறார் பஹத் பாசில். இந்தப்படத்தில் முதன்முதலாக பஹத் பாசில்-நமீதா பிரமோத் ஜோடி சேர்ந்துள்ளனர்.. இந்தப்படத்தில் நடிகை சீதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்...
ரபி மெக்கார்டின் படங்கள் என்றால் எப்போதும் மினிமம் கியாரண்டி வெற்றி என்பதாலும், தன்னை கமர்ஷியல் தளத்திற்குள் அழைத்துச்செல்லும் என்பதாலும் இந்தப்படத்தில் நடிக்க ஆர்வமுடன் ஒப்புக்கொண்டுள்ளார் பஹத் பாசில். இந்தப்படத்தில் நமீதா பிரமோத்துக்கு ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர் வேடம்.. இப்போது பஹத் பாசிலின் கேரக்டர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.. ஆசிரியர்களாக பணிபுரியும் தனது பெற்றோர்களால் சின்ன வயதில் இருந்தே, ரொம்பவும் கட்டுப்பாடாக வளர்க்கப்படும் பஹத் பாசிலின் வாழ்க்கை, அவர் கல்லூரி மாணவனாக மாறியதும் எப்படி திசை மாறுகிறது என்பதும் அதன்பின் வாழ்க்கையில் அவர் எதிர்கொள்ளும் சவால்களும் தான் படத்தின் கதையாம்.
0 comments:
Post a Comment