மீண்டும் தமிழில் ஆர்வம் காட்டுகிறார் பிரதாப் போத்தன்!
13 பிப்,2017 - 09:32 IST
பாலுமகேந்திரா இயக்கிய அழியாத கோலங்கள் படத்தில் நாயகனாக நடித்தவர் பிரதாப்போத்தன். அவருக்கு ஜோடியாக ஷோபா நடித்த அப்படத்தில் கமல்ஹாசன் நட்புக்காக நடித்திருந்தார். அதன்பிறகு வறுமையின் நிறம் சிவப்பு, மூடுபனி, இளமைக்கோலம் உள்பட பல படங்களில் நடித்தார். அதோடு, மீண் டும் ஒரு காதல் கதை, ஜீவா, வெற்றிவிழா உள்பட பல படங்களை இயக்கினார். அந்த வகையில், 1980-90களில் தமிழ், மலையாள சினிமாக்களில் நடிகர், இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்தார் பிரதாப்போத்தன்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அவர், எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். தமிழில் பூஜை, ரெமோ படங்களில் நடித்த பிரதாப்போத்தன், தற்போது மலையாளத்தைப்போலவே தமிழிலும் ஆரம்ப காலத்தைப்போன்று கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். தற்போது பசுபதி நடிக் கும் மாசுகா -என்ற படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் பிரதாப்போத்தன். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் இந்த படம் தயாராகி வருவதைத் தொடர்ந்து மேலும் சில தமிழ்ப்படங்களில் நடிப்பதற்கும் அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார் பிரதாப்போத்தன்.
0 comments:
Post a Comment