கதையைக்கேட்டு கண்கலங்கிய தமன்னா!
13 பிப்,2017 - 09:38 IST
மதுரையை கதைக்களமாகக் கொண்டு பல படங்கள் உருவாகி வருவதைப்போன்று தற்போது வடசென்னை கதைக்களத்திலும் சில படங்கள் தயாராகிக்கொண் டிருக்கின்றன. வெற்றிமாறனின் வடசென்னை, கிருஷ்ணாவின் வீரா, கதிரின் சத்ரு உள்பட பல படங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தற்போது விக்ரம் நடிக்கும் கெட்ச் படமும் வடசென்னை கதைக்களத்தில்தான் உருவாகி வருகிறது. சமூக விரோதிகளை கெட்ச் போட்டு தூக்கும் கதையில் விக்ரம் நடிக்கிறார்.
மேலும், இந்த படத்தில் மெட்ராஸ் படத்தில் கேத்ரின் தெரசா நடித்தது போன்று ஸ்லம் ஏரியா பெண்ணாக நடிக்க முதலில் சாய் பல்லவி கமிட்டாகியிருந்த நிலையில், தற்போது தமன்னா ஓகே ஆகியிருக்கிறார். அதோடு, இந்த படத்தின் கதையை முழுசாக கேட்ட தமன்னா, படத்தின் க்ளைமாக்ஸைக்கேட்டதும் கண்கலங்கி விட்டாராம். அந்த கதையும் கதாபாத்திரங்களும் அவரை அந்தஅளவுக்கு கலங்க வைத்து விட்டதாம்.
அதுமட்டுமின்றி, இதற்கு முன்பு பெரும்பாலான படங்களில் கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட தமன்னா, இந்த படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் எந்தவித ஆடம்பரமும் இல்லாத கெட்டப்பில் நடிக்கிறாராம். பாகுபலிக்குப்பிறகு இந்த படமும் எனது திறமைக்கு தீனி போடும் வகையில் அமைந் துள்ளது என்று கதையை கேட்டு முடித்ததும் சொல்லி உணர்ச்சிவசப்பட்டாராம் தமன்னா.
0 comments:
Post a Comment