Sunday, February 12, 2017

பாப்டா விருது பெற்ற ‛ஸ்லம்டாக்' புகழ் தேவ் பட்டேல்


பாப்டா விருது பெற்ற ‛ஸ்லம்டாக்' புகழ் தேவ் பட்டேல்



13 பிப்,2017 - 12:24 IST






எழுத்தின் அளவு:








ஸ்லம்டாக் மில்லினியர் படத்தின் மூலம் புகழ்பெற்றவர் இந்தியரான தேவ் பட்டேல். தொடர்ந்து பல ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு பாப்டா என்ற சொல்லப்படும் பிரிட்டன் அகடாமி விருது வழங்கும் விழாவில் தேவ்விற்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. லயன் என்ற படத்தில் நடித்ததற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

‛லா லா லாண்ட்' படம் சிறந்த படம், இயக்குநர்(டேமியன் சாலே), நடிகை(எம்மா ஸ்டோன்), இசை(ஜஸ்டின் ஹர்விட்ஸ்), ஒளிப்பதிவு(லைனஸ் சாண்ட்கிரன்) என 5 விருதுகளை வென்றுள்ளது.

சிறந்த நடிகருக்கான விருது மான்செஸ்டர் பை தி சீ படத்தில் நடித்த கேஸி அப்லக்கிற்கு கிடைத்துள்ளது.

சிறந்த துணை நடிகைக்கான விருது "பென்சஸ்" திரைப்பட கதாபாத்திரத்தில் நடித்த வியோலா டாவிஸ் வென்றுள்ளார்.


0 comments:

Post a Comment