'செக்ஸி துர்கா' பட இயக்குனருக்கு மிரட்டல்..!
09 பிப்,2017 - 16:14 IST
திரைப்பட விழாக்களுக்கு தங்கள் படங்களை அனுப்பி விருதுகளை அள்ளுவதன் மூலம் பிரபலமாகும் இயக்குனர்களில் மலையாள இயக்குனர் சணல்குமார் சசிதரன் முக்கியமான ஒருவர். இவர் இயக்கிய 'ஒராள் பொக்கம்' மற்றும் 'ஒளிவு திவசத்தே களி' ஆகிய படங்கள் விமர்சகர்களிடம் பாராட்டை பெற்றதுடன், பதிரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பரிசுகளையும் தட்டி சென்றுள்ளன.இந்தநிலையில் இவர் இயக்கியுள்ள மூன்றாவது படம், குறிப்பாக படத்தின் டைட்டில் தான் இப்போது சர்ச்சையை கிளப்பியது.. இவரது படத்திற்கு செக்ஸி துர்கா என டைட்டில் வைத்துள்ளார்.. கேரளாவில் தற்போது சமூகத்தை அச்சுறுத்தி வரும் விஷயத்தை நையாண்டி செய்து படமாக்கி இருக்கிறாரம்.
ஆனால் இந்தப்படத்தின் டைட்டிலை இவர் வைத்ததில் இருந்தே பல பக்கங்களில் இருந்து அவ்வப்போது மிரட்டல் வர ஆரம்பித்ததாம். இப்போது இந்து ஸ்வபிமான் சங்கத்தின் தலைவர் என்று சொல்லிக்கொண்டு ராகுல் ஸ்ரீவத்சவா என்பவர் தொடர்ந்து இந்தப்பத்தின் டைட்டிலை மாற்றும்படி மிரட்டி வருகிறாராம். அவருடைய ஒரே கேள்வி கடவுள் பெயரான துர்கா முன் ஏன் செக்ஸி என்கிற வார்த்தையை சேர்த்தாய்.. அதற்கு பதிலாக செக்ஸி ஸ்ரீஜா என்றார் வைத்திருக்கலாமே என கூறுகிறாராம். ஸ்ரீஜாவும் கூட கடவுள் பெயர்தானே என இயக்குனர் பதில் சொன்னதற்கு, அப்படிப்பார்த்தால் அது என் மனைவியின் பெயரும் கூடத்தான்.. அதெல்லாம் தெரியாது. டைட்டிலை மாற்றாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திப்பாய் என மிரட்டல் விடுத்துள்ளாராம்.
0 comments:
Post a Comment