Thursday, February 9, 2017

போகன் பட இயக்குநரை போட்டுத்தாக்கிய அரவிந்த்சாமி


போகன் பட இயக்குநரை போட்டுத்தாக்கிய அரவிந்த்சாமி



09 பிப்,2017 - 13:09 IST






எழுத்தின் அளவு:








ஜெயம்ரவியை வைத்து ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய லட்சுமணன், சமீபத்தில் மீண்டும் ஜெயம் ரவியை வைத்து போகன் படத்தை இயக்கினார். ஜெயம் ரவியுடன் அரவிந்த்சாமியும் முக்கிய ரோலில் நடித்திருந்தார். சமீபத்தில் இப்படத்தின் சக்ஸ் மீட் நிகழ்ச்சி கமலா தியேட்டரில் நடந்தது. ஆனால் இதில் அரவிந்த்சாமி பங்கேற்கவில்லை, அவர் அழைப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

அதேசமயம், அதே கமலா தியேட்டருக்கு தான் மட்டும் தனியாக சென்று கேக் வெட்டி சக்சஸ் பார்ட்டி கொண்டாடினார். அதுமட்டுமல்ல சமீபத்தில் அரவிந்த்சாமி ஒரு ஆங்கில பத்திரிகைகக்கு பேட்டியளித்தபோது, “இந்தப்படத்தின் டைரக்டர் லட்சுமணுக்கு சினிமா பற்று ஒண்ணுமே தெரியவில்லை என்பது போன்று, நான் தான் ஸ்கிரீன்பிளேவில் நிறைய திருத்தினேன். அதுமட்டுமல்ல... இன்டர்வெல் பிளாக் கூட அவருக்கு சரியா வைக்கத் தெரியல...” என்று ஓப்பனாக போட்டு உடைத்துவிட்டார்.


0 comments:

Post a Comment