குணசித்திர வேடத்தில் கலக்கும் ராணுவ அதிகாரி
09 பிப்,2017 - 13:44 IST
மதுரையை சேர்ந்தவர் அசோக் பாண்டியன். ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றிய இவர் கடந்த 2012ம் ஆண்டு ஓய்வு பெற்றார். நடிகர் விஷ்வந்தும், பசங்க சிவகுமாரும் இவரது நண்பர்கள். ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை படத்தின் ஆடிசனுக்காக நண்பர்களுடன் சேரன் அலுவலகத்திற்கு சென்றவருக்கு நடிப்பு சான்ஸ் கிடைத்தது. சேரன் பசங்க சிவகுமாரை விட்டுவிட்டு இவரை டிக் அடித்தார். அந்தப் படத்தில் அறிமுகமான அசோக் பாண்டியன் அதன் பிறகு கொடி, மாவீரன் கிட்டு, ரஜினி முருகன், புறம்போக்கு, கத்தி, சிங்கம் 2, பூஜை, நான்தான் பாலா, உள்பட 52 படங்களில் நடித்து முடித்துவிட்டார். இப்போதும் தேடப்படும் குணசித்திர நடிகராகிவிட்டார்.
தற்போது ரஜினியின் 2.ஓ. கடம்பன், காதல் காலம், காஞ்சரான் உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 2.ஓவில் விஞ்ஞானியாக நடிக்கும் அசோக் பாண்டியன் ரஜினியோடு நடித்ததை பெருமையாக கூறுகிறார். ஒரே டேக்கில் அத்தனை காட்சியிலும் அசோக் பாண்டியன் நடிக்க "என்னை விட ஸ்பீடா இருக்கீங்களே" என்று ரஜினியே பாராட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் அசோக் பாண்டியன்.
0 comments:
Post a Comment