Friday, February 3, 2017

முத்தக்காட்சிக்கு 19 டேக் வாங்கிய சிரிஷ், சளைக்காத சாந்தினி


முத்தக்காட்சிக்கு 19 டேக் வாங்கிய சிரிஷ், சளைக்காத சாந்தினி



03 பிப்,2017 - 12:45 IST






எழுத்தின் அளவு:








மெட்ரோ படத்தில் அறிமுகமான சிரிஷ், தற்போது நடித்து வரும் படம் ராஜா ரங்குஸ்கி, சாந்தினி ஹீரோயின். பர்மா, ஜாக்சன் துரை படங்களை இயக்கிய தரணிதரன் இயக்குகிறார். சக்தி வாசனுடன் இணைந்து தரணிதரன் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் மும்முரமாக நடந்து வருகிறது. படத்தில் வரும் ஒரு முத்தக் காட்சியில் நடிக்க ஹீரோ ஷிரிஷ் 19 டேக்குகள் வாங்கியுள்ளார். வளரும் நடிகையான சாந்தினி அதைப் பற்றி கவலைப்படாமல் ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்.

இதுபற்றி படத்தின் இயக்குனர் தரணிதரன் கூறியதாவது: திட்டமிட்டதை விட எங்களின் படப்பிடிப்பு துரித வேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 50 சதவீத படப்பிடிப்பை முடித்து இருக்கின்றோம். இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் இதே வேகத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கின்றோம். கதாநாயகன் ஷிரிஷ் தன்னுடைய கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து வருகிறார், ஆனால் காதல் காட்சிகளில் மட்டும் அவருக்கு கொஞ்சம் பதட்டம் ஏற்பட்டுவிடுகிறது.

கதாநாயகிக்கு முத்தமிடும் காட்சியில் ஏறக்குறைய 19 டேக் வாங்கினார். அநேகமாக அவர் வேண்டுமென்றே தான் அவ்வாறு செய்திருப்பார் என்று தோன்றுகிறது. ஆனால் சாந்தினி எந்த முகச்சுழிப்பும் இல்லாமல் சளைக்காமல் நடித்தார். அவரது ஒத்துழைப்பு எங்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது. என்கிறார் இயக்குநர் தரணிதரன்.


0 comments:

Post a Comment