Friday, February 3, 2017

பெங்களூரு திரைப்பட விழாவில் ‛விசாரணை'


பெங்களூரு திரைப்பட விழாவில் ‛விசாரணை'



03 பிப்,2017 - 12:30 IST






எழுத்தின் அளவு:








9வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா நேற்று தொடங்கியது. பெங்களூரு சட்டசபை வளாகத்தில் நடந்த விழாவில் வங்காள இயக்குனர் புத்ததேவ் தாஸ்குப்தா தொடங்கி வைத்தார். கர்நாடக முதல்வர் சித்தராமையா விழாவிற்கு தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி வைத்தார். எகிப்து இயக்குனர் ஹலா காலில், இயக்குனர் மணிரத்னம், நடிகை சுஹாசினி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

வருகிற 9ந் தேதி வரை பெங்களூர் மற்றும் மைசூரில் விழா நடக்கிறது. இதில் 60 நாடுகளைச் சேர்ந்த 240 படங்கள் திரையிடப்படுகிறது. சர்வதேசம், ஆசியா, இந்தியா, கன்னடம் ஆகிய பிரிவுகளின் கீழ் படங்கள் திரையிடப்படுகிறது. இந்திய பிரிவில் தமிழ் படமான விசாரணை திரையிடப்படுகிறது. திரைப்பட விழாவையொட்டி நடைபெறும் கருத்தரங்கில் வெற்றிமாறன், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் கலந்து கொண்டு பேசுகிறார்கள். நேற்று நடந்த துவக்க விழாவில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, நடிகர் ஓம்பூரி, பாடகர் பாலமுரளிகிருஷ்ணா ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


0 comments:

Post a Comment