சென்னையில் சர்வதேச குறும்பட விழா: 6 ஆயிரம் படங்கள் வருகை
19 பிப்,2017 - 11:57 IST
சென்னையில் உள்ள சென்ன அகாடமி ஆப் மோசன் பிக்சர்ஸ் என்ற அமைப்பு ஆண்டுதோறும் சர்வதேச குறும்பட விழாவை நடத்தி வருகிறது. 4வது சர்வதேச குறும்பட விழா இன்று தொடங்குகிறது. இந்த விழாவில் திரையிட 96 நாடுகளில் இருந்து 6200 படங்கள் வந்துள்ளன. மாலை 6 மணிக்கு ரஷ்யன் கலாச்சார மையத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு இயக்குனர் சீனு ராமசாமி துவக்கி வைக்கிறார்.
வருகிற 25ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 135 படங்கள் திரையிடப்படுகிறது. குறும்படங்களின் வளர்ச்சி, அதன் எதிர்காலம் குறித்த கருத்தரங்குகள், பட விமர்சன அரங்குகள் நடக்கிறது. போட்டி பிரிவிலும் படங்கள் திரையிடப்படுகிறது. நிறைவு நாள் விழாவில் கிராமி விருது பெற்ற இயக்குனர் ரிக்கி கேஜ் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் எஸ்.கண்ணன், துணை தலைவர் பி.ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
0 comments:
Post a Comment