Friday, February 10, 2017

சிரஞ்சீவி, பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடிக்க தயார் : நாகார்ஜூனா









சிரஞ்சீவி, பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடிக்க தயார் : நாகார்ஜூனா



11 பிப்,2017 - 10:12 IST






எழுத்தின் அளவு:








தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் போன்றோர்களுடன் இணைந்து நடிக்க தான் தயாராக இருப்பதாக நாகார்ஜூனா தெரிவித்துள்ளார். நாகார்ஜூனா நடிப்பில் வெளிவந்துள்ள ஓம் நமோ வெங்கடேஷாய எனும் பக்தி படத்தின் புரமோஷனின் போது சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் ஆகியோருடன் சேர்ந்து நடிக்க நீங்கள் தயாரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நாகார்ஜூனா, சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க தயக்கம் எதுவும் இல்லை என்று கூறிய நாகார்ஜூனா, அவ்வாறு திரைக்கதை அமையும் பட்சத்தில் ஒவ்வொருவருக்கும் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று கூறினார். தெலுங்கில் ஊபிரி என்ற பெயரிலும் தமிழில் தோழா என்றும் திரைக்கு வந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து நாகார்ஜூனா கை கால் செயலிழந்தவராக நடித்திருந்தார். இப்படம் விமர்சக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது




Advertisement








மார்ச் 12ல் 'மிஸ்டர்' ஆடியோ ரிலீஸ்மார்ச் 12ல் 'மிஸ்டர்' ஆடியோ ரிலீஸ் தோழா பட இயக்குனருடன் இணையும் அல்லு அர்ஜூன் தோழா பட இயக்குனருடன் இணையும் அல்லு ...










0 comments:

Post a Comment