
தமிழக முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்திற்கும் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கும் இடையே மோதல் முற்றியுள்ளது.
இந்நிலையில் முதல்வருக்கு கமல் பகிரங்கமாக தனது ஆதரவை அளித்துள்ளார்.
இந்தியளவில் பிரபலமான ஓர் ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியதாவது…
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் சசிகலா குறித்து எனக்கு எந்த பாரபட்சமும் கிடையாது.
சசிகலாவின் திறமை குறித்து எதுவும் தெரியவில்லை. மறைந்த முதல்வருடன் அவர் இருந்துள்ளார். அதுவே அரசியலுக்கான தகுதியாகுமா ?
எனவே ஜல்லிக்கட்டு மற்றும் மற்ற விவகாரங்களில் மிகச் சிறப்பாக செயல்பட்ட முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை ஆதரிக்கிறேன்.
அவருடன் கைகூட குலுக்கியது இல்லை. அவர் என் நண்பரும் இல்லை.
ஓ.பன்னீர் செல்வம் எந்த பாதிப்பையும் யாருக்கும் ஏற்படுத்தவில்லை. அவர் திறமையாளர். அவரது ஆட்சி தொடர வேண்டும். என்றார்.
மேலும், தாங்கள் ஆட்டு மந்தை இல்லை என்றும், தங்களை மேய்க்க மேய்ப்பர் ஒருவர் தேவையில்லை.
நாட்டை எவ்வாறு ஆள வேண்டும் என்பது தெரியாதவர்கள், அந்த இடத்திற்கு வரக்கூடாது. சசிகலா மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும். என்றும் விமர்சித்துள்ளார் கமல்ஹாசன்.
0 comments:
Post a Comment