கொரிய படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் சல்மான் கான்
12 பிப்,2017 - 10:56 IST
" ஓடே டு மை பாதர் " என்ற கொரிய மொழி படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாம். இந்தியில் இப்படத்தில் நடிகர் சல்மான் கான் நடிக்க உள்ளாராம். இப்படத்தை அலி அப்பாஸ் ஜாபர் இயக்க உள்ளாராம். ஓடே டு மை பாதர் படம் சிறந்த கதை அம்சம் கொண்ட படம் என்பதுடன், கொரியா சினிமாவிற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. சல்மான் கான் தற்போது " டைகர் ஜிந்தா ஹை" என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் மார்ச் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை தொடர்ந்து சல்மான் நடிக்கும் ட்யூப்லைட் படம் ஜூன் 23ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்த பிறகு, ஓடே டு மை பாதர் படத்தின் ரீமேக்கில் சல்மான் நடிக்க உள்ளாராம்.
0 comments:
Post a Comment