Thursday, October 13, 2016

தேவி-க்கு 75 தியேட்டர்கள் அதிகரிப்பு


தேவி-க்கு 75 தியேட்டர்கள் அதிகரிப்பு



13 அக்,2016 - 12:44 IST






எழுத்தின் அளவு:








பிரபு தேவா தயாரித்து, நடித்துள்ள படம் தேவி. தமன்னா, சோனுசூட், ஆர்ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த இந்த படத்திற்கு ஓரளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தன் மனைவி உடலுக்குள் புகுந்த பேயை விரட்ட கணவன் அந்த பேயுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் வித்தியாசமான படம். தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியான இந்தப் படம் மூன்று மொழிகளிலும் வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தின் வெற்றியை பத்திரிக்கையாளர்களுக்கு அறிவிக்கும் நிகழ்ச்சியில் இயக்குனர் விஜய் பேசியதாவது: கிட்டத்தட்ட ஒரு வருடம் இந்த படத்துடன் டிராவல் பண்ணியிருக்கேன். கதை தயாரானதும் யாரை வைத்து இதை தொடங்குவது என்பதில் குழப்பம் இருந்தது. மூன்று மொழிக்கும் அறிமுகமான தமன்னா ஓகே சொன்னதும்தான் படத்தையே ஆரம்பித்தோம். தயாரிப்பாளர் பிரபுதேவா தான் ஹீரோ என்றாலும் கதை முழுக்க தமன்னா மீதுதான் செல்லும். அதை ஏற்றுக்கொண்டு நடித்ததோடு தயாரிக்கவும் முன்வந்த பிரபுதேவாவுக்கு தான் இந்த வெற்றி சொந்தம்.

இப்போது 75 தியேட்டர்கள் அதிகரித்திருப்பதாக விநியோகஸ்தர் சொன்னது சந்தோஷமா இருக்கிறது. இதுதான் உண்மையான வெற்றி. வெற்றியையும், தோல்வியையும் மாறி மாறி சந்தித்திருக்கிறேன். வெற்றிகள் கொடுத்த சந்தோஷத்தை விட தோல்விகள் தந்த வலி அதிகம். இந்த தருணத்தில் இந்த வெற்றி எனக்கு மிகவும் முக்கியம். இந்த வெற்றிக்காக என் பெற்றோர்களும், நண்பர்களும் நிறைய பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் பிரார்த்தனை வீண் போகவில்லை என்றார் விஜய். முதலில் தேவி 190 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment