விஜய்சேதுபதி படத்தில் இயக்குநர் மகேந்திரன்
19 ஏப்,2017 - 14:36 IST
'நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்' படத்தின் வெற்றி தான் விஜய்சேதுபதிக்கு வணிக மதிப்பை தேடிக்கொடுத்தது. பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த இப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு லாபம் ஈட்டித்தந்த படம். அதன் பிறகே அவரை நம்பி தயாரிப்பாளர்கள் படம் எடுக்க முன் வந்தனர்.
இந்தப்படத்தைத் தொடர்ந்து தற்போது 'சீதக்காதி' எனும் படத்தில் மீண்டும் விஜய்சேதுபதியை இயக்குகிறார் பாலாஜி தரணீதரன். 'சீதக்காதி' படத்தில் மேடை நாடகக் கலைஞராக நடிக்கிறார் விஜய்சேதுபதி. இந்தப் படம் பீரியட் பிலிம் என்று சொல்லப்படுகிறது. 80களில் கதை நிகழ்வதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.
இந்தப்படத்தில் கதாநாயகி என்று யாரும் கிடையாது. அதே நேரம், காயத்ரி, ஓவியா, ரம்யா நம்பீசன் உட்பட பல நடிகைகள் சிறப்புத் தோற்றங்களில் நடிக்கவிருக்கிறார்களாம். மூன்றாவது முறையாக 'சீதக்காதி' படத்தில் விஜய்சேதுபதி உடன் ரம்யா நம்பீசன் இணைந்து நடிக்கவிருக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க, கடந்த வருடம் வெளிவந்த 'தெறி' படத்தில் வில்லனாக நடித்த இயக்குநர் மகேந்திரன், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment