Wednesday, April 19, 2017

நெப்போலியன் படத்தலைப்பில் விஜய்சேதுபதி


நெப்போலியன் படத்தலைப்பில் விஜய்சேதுபதி



19 ஏப்,2017 - 14:28 IST






எழுத்தின் அளவு:








தற்போது நடிப்பைவிட்டு விலகி இருக்கும் நடிகர் நெப்போலியன் ஹீரோவாக நடித்து வந்த காலகட்டத்தில், 1995 ஆம் வருடம் நடித்த படம் மாமனிதன். அந்தப் படத்தில் வினிதா கதாநாயகியாக நடித்திருந்தார். பழைய படங்களின் தலைப்பை மீண்டும் சூட்டும் தற்போதைய டிரெண்டின்படி மாமனிதன் என்ற தலைப்பில் புதிய படம் தயாராக உள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் தர்மதுரை என விஜய்சேதுபதியை வைத்து மூன்று படங்களை இயக்கிய சீனு ராமசாமி தற்போது 4-வது முறையாக மீண்டும் விஜய் சேதுபதி உடன் இணைந்துள்ளார். விஜய் சேதுபதியை கதாநாயகனாக்கி சீனு ராமசாமி மீண்டும் இயக்கவுள்ள அப்படத்தை யுவன் தயாரிக்கவுள்ளார். அந்தப் படத்துக்குத்தான் மாமனிதன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தர்மதுரை படத்துக்குப் பிறகு மாமனிதன் என்ற கதையை எழுதத் தொடங்கிய சீனு ராமசாமி, அந்தக்கதையை பல்வேறு முன்னணி நடிகர்களிடம் தெரிவித்து கால்ஷீட் கேட்டார். ஒரு ஹீரோவும் கால்ஷீட் தர முன்வரவில்லை. இதைகேள்விப்பட்ட விஜய் சேதுபதி, சீனு ராமசாமியை அழைத்து அவரது படத்தில் நடிப்பதாக உறுதியளித்தார்.

அதையடுத்து உற்சாகமாக, தற்போது திரைக்கதை அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் சீனு ராமசாமி. முழுமையாக முடித்தவுடன் நாயகி மற்றும் இதர நடிகர்கள் ஆகியோரைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபடவுள்ளார்.


0 comments:

Post a Comment