தொக்கான நேரத்தில் கிக்காக இறங்கும் கீர்த்தி சுரேஷ்-ன் ஜெராக்ஸ்
Published 1 min ago by CF Team Time last modified: November 1, 2016 at 11:26 am [IST]
பார்க்க கீர்த்தி சுரேஷ் போன்று இருக்கும் கேரளத்து பெண்குட்டியான சனா அல்தாப் சென்னை 28 II படம் மூலம் கோலிவுட் வந்துள்ளார்.
advertisement
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் சனா அல்தாப். 17 வயதே ஆன சனா வெங்கட் பிரபுவின் சென்னை 28 II படம் மூலம் கோலிவுட் வந்துள்ளார். படத்தில் அவர் ஜெய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சனா கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியவர்.சனா மலையாளத்தில் துல்கர் சல்மான் தங்கையாக நடித்துள்ளார். நஸ்ரியாவின் கணவர் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்தவர் சனா. தற்போது பஹதின் தம்பி பர்ஹான் பாசிலுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
வெங்கட் பிரபு படத்தில் கிளாமரை காட்டி ஒப்பேத்தாமல் கதையை நகர்த்தும் வலுவான கதாபாத்திரமாம் சனாவுக்கு. தனது முதல் தமிழ் படத்திலேயே நல்ல கதாபாத்திரம் கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளார் சனா.தமிழ் பேசி நடிக்க கஷ்டப்பட்ட சனாவுக்கு வெங்கட் பிரபு உதவியுள்ளார்.
அவரை தனது குருவாக நினைக்கும் சனா சென்னை 28 II படம் கோலிவுட்டில் தனக்கு நல்லதொரு ஆரம்பம் என்று நினைக்கிறார்.கோலிவுட்டில் இருக்கும் முன்னணி நடிகையான நயன்தாரா, தற்போது வளர்ந்து வரும் கீர்த்தி, லட்சுமி மேனன், மஞ்சிமா மோகன் என பலரும் கேரளாவில் இருந்து வந்தவர்கள்.
தமிழ் திரையுலகில் தற்போது வேகமாக வளர்ந்து வருபவர் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் பார்க்க அவரை போன்றே இருக்கும் சனா அல்தாப் கோலிவுட் வந்துள்ளார். கீர்த்தி தனது சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்தியுள்ள நிலையில் அவரை போன்றே இருக்கும் சனா கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.
English summary : Kerala beauty Sana Althaf has come to Kollywood via Venkat Prabhu’s Chennai 28 II.