என்னை லட்டு பெண்ணாக்கி விட்டார் பி.சி.ஸ்ரீராம்! - கீர்த்தி சுரேஷ்
13 அக்,2016 - 09:38 IST
ரஜினி முருகன் படத்திற்கு பிறக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வெளியாகியுள்ள படம் ரெமோ. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக மட்டுமின்றி ஒரு நர்ஸ் வேடத்திலும் நடித்துள்ளார். என்றபோதும் நாயகி கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரமும் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அதோடு, முந்தைய படங்களை விட அவரிடமிருந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய காட்சிகளும் அதிகமாக இடம்பெற்றுள்ளது. இதனால் இந்த படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
மேலும், இந்த படத்தில் அவரை மிக அழகாக காண்பித்திருப்பதாக கோலிவுட் அபிமானிகள் பலரும் கீர்த்தி சுரேஷிடம் சொல்லி அவரை சந்தோசத்தில் மிதக்க வைத்து வருகின்றனர். இந்த நிலையில், தனது பெற்றோருடன் சென்னையிலுள்ள ஒரு தியேட்டருக்கு விசிட் அடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அப்போது அவர் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த கைதட்டல் கிடைத்திருக்கிறது. அதோடு, அவரது பெற்றோர், ஏற்கனவே நீ அழகு. ஆனா இந்த படத்தில் இன்னும் அழகு கூடி லட்டு மாதிரி இருக்கே என்று கீர்த்தி சுரேஷை மாறி மாறி புகழ்ந்து தள்ளி விட்டார்களாம். இதை ரெமோ படத்தின் நன்றி விழாவில் தெரிவித்த அவர், பி.சி.ஸ்ரீராமுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
0 comments:
Post a Comment