ஒரு வழியாக முடிந்தது பாம்புசட்டை படப்பிடிப்பு
16 அக்,2016 - 14:01 IST
சதுரங்க வேட்டை வெற்றிக்கு பிறகு மனோபாலா உடனடியாக தயாரித்த படம் பாம்புசட்டை. ஜிகிர்தண்டா முடித்த கையோடு பாபி சிம்ஹா ஒப்பந்தமான படம். கீர்த்தி சுரேசின் 2வது தமிழ் படம். படம் எவ்வளவு வேகமாக ஆரம்பித்ததோ அதே வேகத்தில் நின்றும் போனது. காரணம் மனோபாலா இதனை ராடான் நிறுவனத்திற்கும், மேஜிக் பிரேம்ஸ் நிறுவனத்துக்கும் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்து தருவதாக ஒப்பந்தம் போட்டார். அந்த நிறுவனங்கள் பிரிந்து விட்டால் படமும் நின்று விட்டது. ஒரு வருட இடைவெளிக்கு பிறகு மனோபாலா படத்தை சினிமா சிட்டி என்ற புதிய நிறுவனத்திற்கு கைமாற்றி விட்டார்.
அதைத் தொடர்ந்து மீதமுள்ள படப்பிடிப்புகள் நடந்து தற்போது அது முடிந்து விட்டது. டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் தொடங்கி உள்ளது. பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேசுடன் முக்தா பானு, ஆதிரா, நான் கடவுள் ராஜேந்திரன், குருசோமசுந்தரம் ஆகியோர் நடித்துள்ளனர். ஆதம் தாசன் இயக்கி உள்ளார், கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளர், அஜேஷ் இசை அமைத்துள்ளார். தொடர் தோல்விகளை சந்தித்து வரும் பாபி சிம்ஹாவுக்கு இது முக்கியமான படம்.
0 comments:
Post a Comment