கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஆயுதபூஜை விருந்தாக, சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, விஜய்சேதுபதி நடித்த றெக்க மற்றும் பிரபுதேவா நடித்த தேவி ஆகிய 3 படங்கள் ரிலீஸ் ஆனது.
இந்த 3 படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.
மேலும் இவை மூன்றும் ஓரளவு பாசிட்டிவ்வான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
தற்போது 7 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இவை மூன்றின் வசூல் நிலவரங்கள் தெரியவந்துள்ளது.
ரெமோ படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ.31.8 கோடியை வசூல் செய்துள்ளது.
அதாவது சென்னையில் ரூ. 3.35 கோடியும், செங்கல்பட்டில் ரூ. 8.4 கோடியும், கோவையில் ரூ5.5 கோடியும் வசூல் செய்துள்ளதாம்.
இந்த ஆறு நாட்களில், விஜய்சேதுபதியின் ‘றெக்க’ ரூ.9 கோடியும், பிரபுதேவாவின் ‘தேவி’ ரூ.8 கோடியும் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
0 comments:
Post a Comment