கிரிக்கெட் வீரர் டோனி வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாரான ‘எம்.எஸ்.டோனி’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் திஷா பதானி. இந்த படம் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. தமிழிலும் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டது. மேலும் பல தெலுங்கு இந்தி படங்களிலும் திஷா பதானி நடித்துள்ளார்.
இவரை ஐதராபாத்தில் நடந்த ஒரு நகைக்கடை திறப்பு விழாவுக்கு அழைத்து இருந்தனர். இதற்காக அவரது படத்துடன் விளம்பர சுவரொட்டிகளை ஒட்டி இருந்தார்கள். இதனால் திஷா பதானியை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டார்கள். நகைக்கடையை சுற்றி கூட்டமாக அவர்கள் நின்று கொண்டு இருந்தார்கள்.
திஷா பதானி காரில் வந்து இறங்கியதும் ரசிகர்கள் அவரிடம் கைகுலுக்கவும் ஆட்டோகிராப் வாங்கவும் நெருங்கினார்கள். இதில் ரசிகர்கள் கூட்டத்தில் அவர் சிக்கினார். இதை பயன்படுத்தி ரவுடிகள் சிலர் திஷா பதானியின் கையை பிடித்து இழுத்தனர். கட்டிப்பிடிக்கவும் முயற்சித்தார்கள்.
திஷா பதானியிடம் இருந்த கைப்பையையும் பறித்தார்கள். ரசிகர்கள் பிடியில் சிக்கி திஷா பதானி தவித்தார். கூட்டத்தினர் கிள்ளியதாலும் இழுத்ததாலும் அவருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டன. போலீசார் விரைந்து சென்று கூட்டத்தினரை அடித்து விரட்டி திஷா பதானியை மீட்டார்கள்.
0 comments:
Post a Comment