அக்.,25ல் கஹானி 2 டிரைலர் ரிலீஸ்
23 அக்,2016 - 15:30 IST
டைரக்டர் சுஜாய் கோஷ் இயக்கி உள்ள படம் கஹானி 2. இப்படத்தில் அர்ஜூன் ராம்பால் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 2ம் தேதி ரிலீசாக உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர், அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலரை அக்டோபர் 25ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். கஹானி 2 படத்தில் இந்த முறை வித்யா பாக்ஜி கேரக்டரில் வித்யா பாலன் நடிக்கவில்லையாம். அதற்கு பதில் துர்கா ராணி சிங் என்ற வேடத்தில் வித்யா பாலன் நடித்துள்ளாராம்.
0 comments:
Post a Comment