60 வயது நாயகனாக நடிக்கும் ஜெகபதி பாபு
14 அக்,2016 - 15:35 IST
தெலுங்கில் மட்டுமல்லாது தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் குணசித்திர நடிகராகவும் வில்லனாகாவும் பிசியாக நடித்து வரும் ஜெகபதி பாபு, மற்றும் கன்னடத்தில் வெளிவந்த ஜாகுவார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசுவாமியின் தயாரிப்பில் உருவான ஜாகுவார் படத்திற்கு பின்னர், மீண்டும் அவரது தயாரிப்பில் உருவாகும் படத்தில் ஜெகபதி பாபு நடிக்கவுள்ளார் என கூறப்பட்டது. இப்படத்தில் ஜெகபதி பாபு 60 வயது நாயகனாக நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஜாகுவார் படத்தின் புரமோஷனில் கலந்து கொண்ட ஜெகபதி பாபு தான் 60 வயது நாயகனாக நடிப்பதாகக் கூறினார். இப்படத்தில் பணியாற்றவிருக்கும் தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் இயக்குனர் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஜெகபதி பாபு கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment