விஷால்-தமன்னா நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘கத்தி சண்டை’. இப்படத்தை சுராஜ் இயக்கி வருகிறார். முக்கிய வேடத்தில் வடிவேலு, சூரி, ஜெகபதி பாபு, சௌந்தர்ராஜன், மதன் பாப், தருண் அரோரா, சரண் தீப், ஜெயப்பிரகாஷ், சின்னி ஜெயந்த், தாடி பாலாஜி, ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்தில் இடம்பெறும் சேசிங் காட்சி ஒன்று சமீபத்தில் ஈ.சி.ஆர் ரோட்டில் படமாக்கப்பட்டது. வில்லன்கள் ஜெகபதிபாபு, தருண் அரோரா ஆகியோரை விஷால் துரத்தி பிடிக்கும் கார் சேசிங் மற்றும் பைக் சேசிங் காட்சிகளை ஏழு நாட்கள் 12 கேமராக்கள் கொண்டு பிரமாண்டமாக படமாக்கப்பட்டது.
பைக் சேசிங்கில் தேர்ச்சி பெற்ற ஆறு கலைஞர்களை கொண்டு திரில்லிங்காக இதை படமாக்கியுள்ளார்கள். இதோடு, ‘கத்திசண்டை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார்.
0 comments:
Post a Comment