Friday, October 14, 2016

ஸ்ரேயாவுக்கு திருமணம் – மாப்பிள்ளை யார் னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!

ஸ்ரேயாவுக்கு திருமணம் – மாப்பிள்ளை யார் னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க..!

Published 1 min ago by CF Team  Time last modified: October 15, 2016 at 7:46 am [IST]

shreya-cricker15 வருடங்களுக்கு முன்பு இஷ்டம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஸ்ரேயா. பத்து படங்கள் வரை நடித்து விட்டு எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் மழை படத்தின் மூலம்தான் பிரபலமானார்.


advertisement

திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் தனுசுடன் நடித்தார். அதன் பிறகு ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்த பிறகு உச்சத்திற்கு சென்றார். விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்தார், தமிழ் படங்கள் குறைவாக நடித்திருந்தாலும் தெலுங்கு, இந்தியில் 60 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். தமிழில் கடைசியாக தோழா படத்தில் நடித்தார். தற்போது சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்ரேயா இப்போது, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் விரர் டுவைன் பிராவோவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இதுவரை ரகசியமாக இருந்த இந்த தகவல் நேற்று அம்பலமானது. மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு ஸ்ரேயாவும், பிராவோவும் வந்திருந்தனர்.

இருவரும் அங்குள்ள ரெஸ்ட்டாரெண்டில் அமர்ந்து சாப்பிட்டனர். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு பின்னர் ஒரே காரில் ஏறி கிளம்பினர். ஓட்டலை விட்டு வெளியே வரும்போது அடையாளம் கண்டுகொண்ட இளைஞர்கள் அவர்களை செல்போனில் படம் பிடித்து இணைய தளத்தில் வெளியிட்டுள்ளனர். அது வைரலாக பரவி வருகிறது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஷாக் தகவல் கிடைத்துள்ளது.

டுவைன் பிராவோவுக்கும் தமிழ் சினிமாவுக்கும் ஒரு தொடர்பு உண்டு. அவர் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சென்னையில் விளையாடியபோது உலா என்ற தமிழ் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடினார். அப்போது பேட்டியளித்த அவர் “தமிழ் கலாச்சாரம் எனக்கு பிடித்திருக்கிறது. குறிப்பாக வேட்டி சட்டை மிகவும் பிடித்திருக்கிறது” என்றார். தமிழ் நடிகைகளை பிடித்திருக்கிறது என்று அவர் அப்போது சொல்லவில்லை. இப்போது அதை வெளிப்படுத்துகிறாரோ என்னவோ..!

Summary in English : A Buzz is that Cricketer Bravo to marry Actress Shreya saran soon. But, there is no official announcement about it.

0 comments:

Post a Comment