டைரக்டர் பா.ரஞ்சித் தயாரித்த ஆவணப்படம்!
15 அக்,2016 - 13:04 IST
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். கபாலி படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில், மீண்டும் ரஜினி நடிக்கும் படத்தை தனுஷின் வுண்டர் பார் பிலிம்சுக்காக அடுத்து அவர் இயக்குவார் என்று தனுஷ்தரப்பில் இருந்து செய்தி வெளியானது. ஆக, தற்போது ரஜினியை இயக்குவதற்கான கதை வேலைகளில் இறங்கியிருக்கிறார் பா.ரஞ்சித்.
இந்த நிலையில், தனது சொந்த நிறுவனமான நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாராகியுள்ள ஒரு டாகுமெண்டரி படத்தின் டிரைலரை தற்போது யு-டியுப்பில் வெளியிட்டுள்ளார் ரஞ்சித். இந்த படம் Beware of Castes Mirchpur -என்ற பெயரில் தயாராகியுள்ளது. ஹரியானா மாநிலத்திலுள்ள ஜாதி பிரச்சினையை மையமாகக்கொண்டு தயாராகியுள்ள இந்த படத்தை ஜெயக்குமார் என்பவர் இயக்கியிருக்கிறார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.
0 comments:
Post a Comment