டுவின்ஸ் வேடத்தில் நடிக்கும் சிம்பு-தனுஷ்!
15 அக்,2016 - 12:44 IST
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கொடி. இந்த படத்தில் கொடி, அன்பு என்ற அண்ணன்-தம்பியாக நடித்துள்ளார் தனுஷ். அவர்களுக்கு ஜோடியாக திரிஷா, அனுபமா நடித்துள்ள இப்படம் அரசியல் கதையில் உருவாகியிருக்கிறது. தனுஷை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் படமாக இந்த கொடி அமையும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். மேலும், இந்த படத்தில் கதைப்படி ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டையராக நடித்துள்ளாராம் தனுஷ்.
இதேபோல் சிம்புவும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டையர் வேடத்தில்தான் நடிக்கிறார். கதைப்படி, அப்பா சிம்புவாக நடிக்கும் அஸ்வின் தாத்தாவுக்கும், அம்மாவாக நடிக்கும் ஸ்ரேயாவுக்கும் ஒரே பிரசவத்தில் பிறக்கும் அண்ணன்-தம்பியாக சிம்பு நடித்துள்ளார். இதில் சிம்பு நடிக்கும் மதுரை மைக்கேல் கேரக்டரை படமாக்கி விட்ட ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்தபடியாக இரட்டையர்களில் ஒருவரான இன்னொரு சிம்பு கேரக்டரை படமாக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.
0 comments:
Post a Comment