சென்சார் அனுமதித்தால் என்னை நிர்வாணமாக பார்க்கலாம் - ரன்வீர் போட்ட குண்டு
14 அக்,2016 - 17:39 IST
பாஜிராவ் மஸ்தானி எனும் வரலாற்று சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த ரன்வீர் சிங், அடுத்தப்படியாக ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் ‛பேபிக்ரே' எனும் படத்தில் நடித்துள்ளார். ரன்வீர் ஜோடியாக வாணி கபூர் நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. 2.5 நிமிட டிரைலரிலேயே ரன்வீரும், வாணி கபூரும் முக்கால்வாசி காட்சிகளில் முத்த மழை பொழிந்துள்ளனர். அத்துடன் படுக்கறை காட்சிகளிலும் நடித்துள்ளனர். இதுதவிர ஒருகாட்சியில் உள்ளாடையுடன் பேஷன் ஷோவில் நடந்து வருவது போன்று ரன்வீர் நடித்திருக்கிறார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் ரன்வீர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் நிர்வாணமாக நடித்துள்ளதாக குண்டை தூக்கி போட்டுள்ளார். இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது... ‛‛சென்சார் போர்டு அனுமதித்தால் ‛பேபிக்ரே' படத்தில் என்னை நீங்கள் நிர்வாணமாக பார்ப்பீர்கள். நீங்கள் மட்டுமல்ல, நானும் அதை பார்க்க ஆர்வமாய் இருக்கிறேன். இதுபோன்ற காட்சியில் நடிக்க நான் வெட்கப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
0 comments:
Post a Comment