விஜய்க்கு எதிராக நயன்தாரா செய்யவிருக்கும் வேலை..! சலசலப்பில் ரசிகர்கள்
Published 1 min ago by CF Team Time last modified: October 14, 2016 at 9:52 am [IST]
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி61 படத்தில் காஜல் அகர்வாலை ஹீரோயினாக்க விஜய் விரும்பியதாகவும், அதனால் அட்லி காஜல் அகர்வாலையே ஹீரோயினாக புக் செய்துவிட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், அட்லி-யின் இந்த படத்திலும் இரண்டு கதாநாயகிகள்.
advertisement
எனவே, தனது முதல் படத்தின் வெற்றிக்கு காரணம் என கருதும் நாயகியான நயன்தாராவையும் இப்படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம் அட்லி. கதைப்படி, நயன்தாராவிற்கு இப்படத்தில் விஜய்-க்கு எதிராக வில்லத்தனமான வேலைகள் செய்யும் கேரக்டர் என கூறுகிறார்கள்.
இது குறித்து, நம்பதகுந்த வட்டரங்களிடம் விசாரித்த போது, விஜய் தற்போது பைரவா பட வேளைகளில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறார். அட்லியுடனான படம் ஏறத்தாழ முடிவாகிவிட்டது. இது குறித்த அறிவிப்பை இந்த மாத இறுதியில் அறிவிப்பார்கள் என தெரிவித்துள்ளார்கள்.
விஜயுடன் “வாடா மாப்புள வாழப்பழ தோப்புல” என ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருந்த நயன்தாராவை இப்படி அவருக்கே வில்லி ஆக்கிடாய்ங்களே.. என ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் சலசலப்பு என்றாலும், இப்போதே எதிர்பார்ப்பு தெறிக்கவிட்டு கொண்டிருக்கிறது.
Summary in English : There were news dong the rounds in K-town that Kajal will be playing the female lead in Vijay61 to be directed byAtlee. There is no official confirmation from anyone, but now the buzz is that Nayanthara has been approached to do the anti female lead.
0 comments:
Post a Comment