Sunday, October 23, 2016

தமிழ் சினிமாவில் ஒரு சாதனை முயற்சி – அதிரடி தகவல்கள்

தமிழ் சினிமாவில் ஒரு சாதனை முயற்சி – அதிரடி தகவல்கள்

Published 1 min ago by CF Team  Time last modified: October 24, 2016 at 7:56 am [IST]

arandavanukku_irundathellam_pei_stills_013இயக்குனர் எம்.எஸ்.செல்வா பத்தே மணி நேரத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பையும் நடத்தி சாதனை புரிந்திருக்கிறார். அந்த படத்திற்கு ‘அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு மாலை 5 மணிக்கெல்லாம் முடிவடைந்திருக்கிறது.


advertisement

கிட்டத்தட்ட இரண்டு மாத கடின உழைப்பினாலும், திட்டமிடலாலும் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குனர் எம்.எஸ்.செல்வா தலைமையிலான படக்குழு. இதற்கு முன்பு 24 மணி நேரத்தில் பல இயக்குனர்கள் சேர்ந்து எடுத்த ‘சுயம்வரம்’ படம் தமிழில் குறைந்த நேரத்தில் எடுக்கப்பட்ட படமாக சாதனைப் பட்டியலில் நீடிக்கிறது.

அதனை முறியடிப்பதோடு லிம்கா சாதனைப் பட்டியலிலும் இடம்பெறும் உத்வேகத்துடனும் இந்த படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இந்த படத்தில் டாக்டர். பி.சரவணன், அனுகிருஷ்ணன், சிங்கம்புலி, குமரேசன், இயக்குனர் எம்.எஸ்.செல்வா, கிரேன் மனோகர், நெல்லை சிவா, சுப்புராஜ், போண்டா மணி ஆகியோர் நடித்துள்ளனர்.

Summary in English : An Tamil movie titles Arandavanukku Irundhathellam Pei shot in just 10 hours to create new record on Guinness and Limca.

0 comments:

Post a Comment