எதற்கும் தயங்க மாட்டேன் : லண்டனில் ‛சங்கமித்ரா' ஸ்ருதிஹாசன்
20 ஏப்,2017 - 10:19 IST
பாகுபலி படத்தின் முதல் பகாத்தை தமிழில் வெளியிட்டு பல கோடி லாபம் பார்த்தது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ். அதன் காரணமாகவோ என்னவோ பாகுபலி படத்தைப்போல் நாமும் ஒரு படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க வேண்டும் என்று திட்டமிட்டது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கவிருக்கும் 'சங்கமித்ரா' படம் தொடங்கப்பட்ட பின்னணி இதுதான்.
விஜய், சூர்யா, மகேஷ்பாபு ஆகியோர் நடிக்க மறுத்தநிலையில் தற்போது, ஆர்யா, 'ஜெயம்' ரவி இருவரும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது! இந்த படத்தில் போர்ப்பயிற்சி பெற்ற வீராங்கனையாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இதற்காக பல சண்டைப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம் ஸ்ருதிஹாசன். அதன் ஒரு அங்கமாக, தற்போது லண்டனிலுள்ள ஒரு பிரபல சண்டை பயிற்சியாளரிடம் வாள் சண்டை பயிற்சி பெற்று வருகிறார்.
"வாழ்க்கையில் முடியாதது எதுவும் இல்லை. நான் எப்போதும், முடியாது, தெரியாது என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டேன். எந்த கேரக்டரிலும் என்னால் நடிக்க முடியும். அதற்கு என்னை தயார்படுத்திக் கொள்வேன். எதற்கும் தயங்க மாட்டேன். அஞ்சமாட்டேன்" என்கிறார் ஸ்ருதி ஹாசன்.
0 comments:
Post a Comment