‛கசி' படம் பற்றி மனம் திறந்த டாப்சி
13 அக்,2016 - 15:02 IST
தென்னிந்திய படங்களில் நடித்து வந்த டாப்சி, இப்போது முழுநேர பாலிவுட் நடிகையாகிவிட்டார். சமீபத்தில் அமிதாப் உடன் இவர் நடித்து வெளிவந்த ‛பிங்க்' படம் ஹிட்டாக அமைந்ததால் மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்நிலையில் அடுத்தப்படியாக கசி எனும் படத்தில் நடிக்கிறார். ராணா டகுபதி ஹீரோவாக நடிக்கிறார், சங்கல்ப் ரெட்டி இயக்குகிறார். இப்படம் கசி எனும் நீர்மூழ்கி கப்பலை மையமாக வைத்து உருவாக உள்ளது.
இப்படம் பற்றி நடிகை டாப்சி கூறியிருப்பதாவது... ‛‛கசி படத்தில் நானும் இருக்கிறேன் என்று எண்ணும்போது மகிழ்ச்சியாக உள்ளது. நீர்மூழ்கி கப்பலை மையப்படுத்தி இந்தியாவில் உருவாகும் முதல்படம் இதுவாகும். கசி நீர்மூழ்கி கப்பலை அடிப்படையாக கொண்டு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இதில் நான் வங்கதேசத்தை சேர்ந்த அகதியாக நடிக்கிறேன். படத்தில் கிராபிக்ஸ் உள்ளிட்ட பல பணிகள் இருக்கிறது. விரைவில் படம் ரிலீஸாக உள்ளது'' என்று கூறியுள்ளார்.
ராணா, டாப்சி இருவரும் தென்னிந்தியாவில் பிரபலமானவர்கள் என்பதால் கசி படம் ஹிந்தி, தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. தமிழில் டப் செய்து வெளியிட உள்ளார்கள்.
0 comments:
Post a Comment