
இவ்விழாவில், ரஜினி, சங்கர், ஏ.ஆர்.ரகுமான், அக்ஷய் குமார், ரசூல் பூக்குட்டி, உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர் ஆர்யா, விஜய் ஆண்டனி, எடிட்டர் ஆண்டனி, எழுத்தாளர் ஜெயமோகன், ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது:-
சங்கருடன் பணியாற்றுவது வித்தியாசமானது. அவர் மிகவும் கச்சிதமானவர். அதனால் தான் அவர் மிகப்பெரிய இயக்குநராக உள்ளார். 3-டி இல் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
முதல் முறையாக ஹாலிவுட் தரத்தில் 2.0 படம் உருவாகியுள்ளது. 2.0 திரைப்படத்தின் உண்மையான ஹீரோ அக்ஷய் குமார் தான்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment