Sunday, November 20, 2016

நடிகர் பி.ஆர்.பந்துலு: 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்


நடிகர் பி.ஆர்.பந்துலு: 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்



20 நவ,2016 - 13:51 IST






எழுத்தின் அளவு:








புகழ் பெற்ற பழம்பெரும் இயக்குனர் பி.ஆர்.பந்துலு. தமிழில் வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், தங்கமலை ரகசியம், சபாஷ் மீனா, பலே பாண்டியா, ஆயிரத்தில் ஒருவன், ரகசிய போலீஸ் 115, தேடிவந்த மாப்பிள்ளை உள்பட பல பிரமாண்ட படங்களை இயக்கியவர், கன்னடத்தில் இன்றைக்கும் போற்றப்படு, கிட்டூர் சென்னம்மா, கிருஷ்ண தேவராயா, ஸ்கூல் மாஸ்டர் படங்களையும் இயக்கியவர். 50க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர்.

பி.ஆர்.பந்துலு சிறந்த நடிகர் என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. அவர் இயக்கும் படங்களில் ஏதாவது ஒரு சிறிய கேரக்டரிலாவது நடித்து விடுவார். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் மட்டும்தான் அவர் நடிக்கவில்லை. காரணம் பிரமாண்டமாக தயாரிக்கப்ட்ட அந்த படத்தை இயக்குவதிலும், அதற்கு பணம் திரட்டுவதிலுமே அதிக கவனம் செலுத்த வேண்டியது இருந்தது.

பி.ஆர்.பந்துலு 1936ல் வெளிவந்த சம்சார நூகா என்ற கன்னடப் படத்தில் இயக்குனராக அறிமுகமானார். அந்தப் படத்திலும் நடித்தார். தமிழில் நாம் இருவர் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். இந்த படங்களை அவரே தயாரித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் 3 மொழிகளிலும் சுமார் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.


0 comments:

Post a Comment