பழைய வண்ணாரப்பேட்டையில் அரசியல் கொலை
20 நவ,2016 - 14:27 IST
கிருஷ்ணா டாக்கீஸ் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் எம்.பிரகாஷ் தயாரிக்கும் படம் பழைய வண்ணாரப்பேட்டை. இதில் பிரஜன், அஷ்மிதா, ரிச்சர்ட், நிஷாந்த், கருணாஸ், கானாபாலா, உள்ளபட பலர் நடிக்கிறார்கள். பாருக் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜூபின் இசை அமைத்துள்ளார். இது ஒரு அரசியல் கொலை பற்றிய படம் என்கிறார் இயக்குனர் ஜி.மோகன். படம் பற்றி மேலும் அவர் கூறியதாவது:
இது ஒரு பொலிடிக்கல், கிரைம், திரில்லர் படம். பழைய வண்ணாரப்பேட்டையில் வசிக்கும் பிரஜனின் நண்பன் எதிர்பாராத விதமாக ஒரு கொலை சம்பவத்தில் குற்றவாளியாகிறான். அந்த கொலைக்கு பின்னால் அரசியல் சதி இருப்பதை கண்டுபிடித்து பிரஜன் தனது நண்பனை எப்படி காப்பாற்றினார் என்பதுதான் இந்த படத்தின் கதை.
நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே பழைய வண்ணாரப்பேட்டையில் தான். அங்கே நான் பார்த்து விஷயங்களில் உருவானதுதான் இந்த படம். எங்க ஏரியாவில் எது நடக்க கூடாது என்று நினைத்தேனோ அதையே படமாக்கி இருக்கிறேன். உலகம் முழுவதும் எங்க ஏரியா பிரபலமாக தான் இந்த படத்தின் தலைப்பை “ பழைய வண்ணாரப்பேட்டை என்று வைத்துள்ளேன். படத்தை அனாமிகா பிக்சர்ஸ் சார்பில் இளையா வெளியிடுகிறார். தணிக்கை குழு யு சான்றிதழ் கொடுத்துள்ளது. டிசம்பர் 2ந் தேதி வெளிவருகிறது" என்றார் இயக்குன் ஜி.மோகன்.
0 comments:
Post a Comment