Sunday, November 20, 2016

சூப்பர் ஸ்டாரின் ‘2.0’ பர்ஸ்ட் லுக் விழா ஹைலைட்ஸ்…


all stars stageலைக்கா-ஷங்கர்-ரஜினி- அக்‌ஷய்குமார் கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


ஏஆர். ரஹ்மான் இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில் நடைபெற்ற சம்பவங்களின் சுவாரஸ்ய தகவல்களை இங்கே தொகுத்துள்ளோம்.

இவ்விழாவில் லைக்கா நிறுவனர் சுபாஷ்கரன் உள்ளிட்டவர்களுடன் படக்குழுவினர் பங்கேற்றனர்.

மேலும் லதா ரஜினிகாந்த், நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஆர்யா பங்கேற்றனர்.

விழாவில் ஏஆர் ரஹ்மான் பேசும்போது…

இதுவரை எத்தனையோ படங்களை இசையமைத்துவிட்டேன். ஆனால் இப்படத்திற்கு மிகவும் சிரமப்பட்டு இசையமைத்துள்ளேன்.

ஒரு பாடல் முழுவதுமாக முடிந்துவிட்டது.

சவுண்ட் இன்ஜினியர் ரசூல்குட்டி பேசும்போது… இப்படத்திற்கு உலகத்திலேயே இதுவரை யாரும் பயன்படுத்தாத சில சவுண்டுகளை பயன்படுத்தி உள்ளேன்.

எடிட்டர் ஆண்டனி பேசும்போது… 3டி கிளாஸ் அணிந்து கொண்டுதான் இப்படத்தின் எடிங்டிங் பணிகளை செய்தேன்.

அக்‌ஷய்குமார் பேசும்போது… எல்லாரும் ரஜினியிடம் இருந்து கிளாஸ் (கண்ணாடி) அணிவது, கோட் போடுவது, சிகரெட் பிடிப்பது போன்றவற்றை கற்றுக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

இப்படம் இந்திய சினிமாவில் பெரும் சாதனைகளை படைக்கும் என்றார்.

ஷங்கர் பேசும்போது… நிச்சயம் ரோபோ படத்தின் மூன்றாம் பாகம் வரும்” என்றார்.

0 comments:

Post a Comment