சதுரங்க வேட்டைக்காக ஒரு கோடியில் ஜெயில் செட்
21 நவ,2016 - 12:28 IST
நட்டி நட்ராஜ், இஷாரா, நடித்த சதுரங்க வேட்டை படத்தை வினோத் இயக்கினார். இப்போது சதுரங்க வேட்டை இரண்டாம் பாகம் தயாராகிறது. இதற்கு வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். நிர்மல் குமார் இயக்குகிறார். இவர் விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தை இயக்கியவர். அரவிந்த்சாமி, த்ரிஷா, நாசர், பிரகாஷ்ராஜ், உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இது ஹாலிவுட் பாணியிலான ஏமாற்று திருடர்களின் கதை. புத்திசாலித்தனமாக மற்றவர்களை ஏமாற்றி வாழ்கிற ஹெடெக் திருடர்களின் கதை. சிறையில் அடைக்கப்படும் அரவிந்த்சாமியும், த்ரிஷாவும் சிறையிலிருந்து தங்களின் புத்திசாலிதனத்தை பயன்படுத்தி தப்பிப்பது போன்ற காட்சிகள் படத்தில் இடம்பெறுகிறது. இதற்காக சிறைச்சாலை மற்றும் சிறைச்சாலையை ஒட்டி உள்ள பாதாள சாக்கடை கால்வாய் செட்டுகள் போடப்பட்டுள்ளது. படத்தில் ஜெயில் காட்சிகள் 20 நிமிடங்கள் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஜெயில் செட், சிறை கைதிகள், காவலர்கள் உடை என ஒரு கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பபடுகிறது.
0 comments:
Post a Comment