Monday, November 21, 2016

விஜய் பாராட்டியதால் செம ‘கிக்’கில் ஜிவி.பிரகாஷ்


vijay gv prakashஎம். ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடித்த ‘கடவுள் இருக்குறான் குமாரு’ (KIK) படம் ஓரிரு தினங்களுக்கு முன் வெளியானது.


முதல்நாளில் மட்டும் ரூ. 2.60 கோடி வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கடந்த வார இறுதியில் சென்னையில் உள்ள 18 திரையரங்க வளாகங்களில் 223 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரூ.80,39,240 வசூலாகியுள்ளதாம்.

இது ‘த்ரிஷா இல்லைனா’ நயன்தாரா’ படத்திற்கு பின்னர் ஜி.வி. பிரகாஷ் கேரியரில் அதிக வசூல் செய்துள்ள படம் என கூறப்படுகிறது.

இதனிடையில் ஜி.வி.பிரகாஷை போனில் தொடர்பு கொண்டு விஜய் வாழ்த்தினாராம்.

படத்தின் வசூலும், விஜய்யின் வாழ்த்தும் கிடைத்துள்ளதால் செம கிக்கில் இருக்கிறாராம் ஜி.வி. பிரகாஷ்.

0 comments:

Post a Comment