ஷாரூக்கை புகழும் கவுரி ஷிண்டே
21 நவ,2016 - 15:09 IST
பாலிவுட்டின் பிரபல இயக்குநர்களில் கவுரி ஷிண்டேவும் ஒருவர். இவர் தற்போது நடிகை ஆலியாபட், ஷாரூக்கான் ஆகியோரை கொண்டு ‛டியர் ஜிந்தகி என்ற படத்தை இயக்கி உள்ளார். ரிலீஸ்க்கு தயாராகியுள்ள டியர் ஜிந்தகி படத்தின் புரொமோஷன் வேலைகளில் ஆலியா, கவுரி உள்ளிட்ட படக்குழு ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற இயக்குநர் கவுரி ஷிண்டே நடிகர் ஷாரூக்கானை பற்றி புகழ்ந்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது....."இயக்குநர்களின் கனவு ஹீரோ ஷாரூக்கான். படத்தில் சில காட்சிகளை சேர்க்கவோ, நீக்கவோ வேண்டும் என்றால் அதை மாற்றும் திறன் அவரிடம் உள்ளது. அதையும் அவர் கதையின் ஆரம்பக்கட்ட நிலையிலேயே செய்ய சொல்லி விடுவார். நாங்களும் அவர் செய்த மாற்றங்களை ஏற்று கொள்வோம். ஷாரூக்கான் தன்னை ஒரு சூப்பர் ஸ்டாராக பார்க்கவில்லை, அனைவரும் ஒரு குழுவாக இணைந்து இப்படத்தை இயக்கினோம். அதேசமயம் படத்தின் கதையை ஒரு நாளும் ஷாரூக் மாற்ற சொன்னதே இல்லை, அப்படி அவர் கூறவும் மாட்டார். ஒருவேளை படத்தின் காட்சிகளை மாற்ற வேண்டும் என்று ஷாரூக் நினைத்தால் அதை நம்மிடம் அனுமதி கேட்டு பின்புதான் மாற்ற சொல்வார், அத்தகைய பண்பானவர். இயக்குநர் மற்றும் நடிகர்கள் இடையே இருக்கும் உறவை மதிப்பவர். இப்படத்தில் ஷாரூக் இருப்பது எங்களுக்கு நம்பிக்கை கொடுத்து இருக்கிறது". இவ்வாறு கவுரி கூறியுள்ளார்.
‛டியர் ஜிந்தகி' படம் அடுத்த வாரம் 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
0 comments:
Post a Comment