Sunday, November 20, 2016

கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்!


கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்!



21 நவ,2016 - 08:33 IST






எழுத்தின் அளவு:








ஜி தமிழ் சேனலில் லட்சுமிராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கிண்டலடிப்பது தொடர்ந்து வருகிறது. முதலில் விஜய் டிவியின் அது இது எது நிகழ்ச்சியில் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று கிண்டல் செய்தனர். அந்த டயலாக் பின்னர் பல படங்களில் இடம்பெற்றதோடு, சிவகார்த்திகேயன் நடித்த ரஜினிமுருகன் படத்தில் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று பாடலாகவே வெளியானது. இதனால் கடும் கோபமடைந்த லட்சுமிராமகிருஷ்ணன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

ஆனால், பின்னர் சினிமா, சின்னத்திரைகளில் அவரை கலாய்ப்பதை நிறுத்திக்கொண்டனர். இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஜி.வி.பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு படத்திலும் அந்த நிகழ்ச்சியை மீண்டும் கலாய்த் துள்ளனர். அந்நிகழ்ச்சியில் தன்னை கிண்டல் செய்த ஆர்.ஜே.பாலாஜியை தனது டுவிட்டரில் கடுமையாக சாடியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன். எனது நிகழ்ச்சியை கிண்டல் செய்வதற்கு முன்பு, நீங்கள் நடித்த படங்களை விமர்சனம் செய்ய கற்றுக் கொள்ளுங்கள். மேலும், சென்னையில் வெள்ளம் ஏற்பட்டபோது நீங்கள் ஹீரோவைப்போன்று காட்டிக்கொண்டீர்கள் என்று நான் சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும். ஆனால் நான் உங்களை போன்ற ஆள் இல்லை என்றும் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.


0 comments:

Post a Comment